உ.பி. கனமழையில் சுவர் இடிந்து விபத்து: தாய்-மகள் உயிரிழப்பு
உத்தரப்பிரதேசத்தில் தொடர் மழை காரணமாக களிமண் சுவர் இடிந்து விழுந்ததில் தூங்கிக்கொண்டிருந்த தாய்-மகள் உயிரிழந்தனர்.
இந்தியாஉ.பி. கனமழையில் சுவர் இடிந்து விபத்து: தாய்-மகள் உயிரிழப்பு
உத்தரப்பிரதேசத்தில் தொடர் மழை காரணமாக களிமண் சுவர் இடிந்து விழுந்ததில் தூங்கிக்கொண்டிருந்த தாய்-மகள் உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் தொடர் மழை காரணமாக களிமண் சுவர் இடிந்து விழுந்ததில் தூங்கிக்கொண்டிருந்த தாய்-மகள் உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடர் மழை பெய்து வருவதால், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே பிண்ட்கி பகுதியில் நேற்று (புதன்கிழமை) இரவு பெய்த மழையில் தன்வா கேடா கிராமத்தில் உள்ள வீடு ஒன்றின் களிமண்ணால் செய்யப்பட்ட சுவர் கரைந்து இடிந்து விழுந்தது.
இதில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தாய் மற்றும் 5 வயது மகள் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் இரண்டு குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.