உ.பி.யில் சிறுமி வன்கொடுமை செய்து கொலை: குற்றவாளி கைது
உத்தரப்பிரதேசத்தில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெறித்துக் கொலை செய்த குற்றவாளியை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெறித்துக் கொலை செய்த குற்றவாளியை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் கெரி பகுதியில் 3 வயது சிறுமியை காணவில்லை என்று கூறி காவல்துறையில் புகார் அளித்து அவரது பெற்றோர்கள் தேடியுள்ளனர். இந்த நிலையில், அப்பகுதியில் இருந்த மைதானத்தில் இறந்த நிலையில் சிறுமி மீட்கப்பட்டார்.
சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. சிறுமியின் உடற்கூராய்விலும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையறிந்த குற்றவாளி தப்பியோடினார். அவரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு உயிருடன் பிடித்தனர். குண்டடிப்பட்ட குற்றவாளி மருத்துவமனையில் சுயநினைவுடன் இருப்பதாக காவல் துணை கண்காணிப்பாளர் பிரதீர் குமார் வர்மா தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த மாவட்டத்தில் மூன்றாவது முறையாக பெண்குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் நிகழ்வது குறிப்பிடத்தக்கது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றன.