முகப்பு
இந்தியா

கோழிக்கோடு விமான நிலையத்தில் ரூ.36 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

சவுதி அரேபியாவிலிருந்து கேரளத்தின் கோழிக்கோடு விமான நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.36 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை விமான நிலைய நுண்ணறிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கம்
பகிர்:

செளதி அரேபியாவிலிருந்து கேரளத்தின் கோழிக்கோடு விமான நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.36 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை விமான நிலைய புலனாய்வு பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.செளதி அரேபியாவின் ஜெட்டாவிலிருந்து சனிக்கிழமை கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையம் வந்த பயணி ஒருவர் குக்கரில் மறைத்துக் கடத்தி வந்த சுமார் 700 கி கடத்தல் தங்கத்தை காவல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் தங்கத்தைக் கடத்தி வந்தவர் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த டி.ஹம்ஸா என்பது தெரிய வந்தது. தொடர்ந்து ஹம்ஸாவை காவல் அதிகாரிகள் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.