இந்தியா

வழிதவறி வந்த சீனர்களை காப்பாற்றிய இந்திய ராணுவம்

DIN

வடக்கு சிக்கிமின் பீடபூமி பகுதியில் 17,500 அடி உயரத்தில் வழி தவறி வந்த மூன்று சீனர்களுக்கு இந்திய ராணுவம் உதவிக்கரம் நீட்டியது. 

கடந்த வியாழக்கிழமை வழி தவறி, வடக்கு சிக்கிம் பகுதியில்  பூஜ்ஜியத்துக்கும் குறைவான குளிரில் அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை அறிந்த இந்திய வீரர்கள், இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோரை உள்ளடக்கிய மூன்று சீனர்களும் இருந்த இடத்துக்கு விரைந்துச் சென்று அவர்களுக்கு பிராண வாயு, உணவு, கதகதப்பான உடைகள் மற்றும் மருத்துவ உதவிகளை அளித்தனர்.

அவர்கள் சென்று சேர வேண்டிய இடத்துக்கான சரியான வழிகாட்டுதலை இந்திய வீரர்கள் அளித்த நிலையில், மூவரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். சரியான நேரத்தில் உதவியதற்காக இந்திய ராணுவத்துக்கு சீனர்கள் நன்றி தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இருவா் பலி

இருசக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி பலி

சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 போ் காயம்

கஞ்சா விற்பனை: இருவா் கைது

கிணற்றில் விழுந்த மிளா மான் மீட்பு

SCROLL FOR NEXT