முகப்பு
இந்தியா

தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்தது ஏன்?: கேஜரிவால் விளக்கம்

கரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மக்கள் யாரும் பீதியடைய தேவையில்லை, நிலைமை கட்டுக்குள் உள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
No need to panic, COVID-19 situation is completely under control in Delhi: Kejriwal
பகிர்:

புது தில்லி: கரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மக்கள் யாரும் பீதியடைய தேவையில்லை, நிலைமை கட்டுக்குள் உள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை தெரிவித்துள்ளார். 

ஆன்லைன் ஊடக சந்திப்பில் முதல்வர் கூறியதாவது, 

தில்லியில் கரோனா பாதிப்பு அதிகமாவதற்குக் காரணம், பரிசோதனைகள் 2 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, தொற்று அதிகமாகப் பதிவாகியுள்ளது.  இதைக் கண்டு மக்கள் யாரும் பீதியடையவோ, அச்சம் கொள்ளவோ தேவையில்லை. 

தில்லியில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாகவும், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் ஊடகங்களுக்கு அளித்த  பேட்டியில் தெரிவித்தார். 

கரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் மக்கள் பின்பற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தில்லியில் கரோனா மருத்துவமனையில் படுக்கை வசதிக்குப் பஞ்சமில்லை, 14 ஆயிரம் படுக்கைகளில் 5 ஆயிரம் மட்டுமே தற்போது நிரம்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

நேற்று நிலவரப்படி, தில்லியில் புதிதாக 2,914 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளன. கடந்த 69 நாள்களில் அதிக பாதிப்பு இதுவாகும். செப்டம்பர் மாதத்தில் தொடர்ச்சியாக நான்காவது நாளாக, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை 36,000 சோதனைகள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.