பிரகாஷ் ஜாவடேகரின் ஆசிரியர் தின நினைவலை 
இந்தியா

பிரகாஷ் ஜாவடேகரின் ஆசிரியர் தின நினைவலை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டு தோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

DIN


முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டு தோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்று நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அரசியல் கட்சித் தலைவர்களும், பல முக்கிய பிரமுகர்களும் ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தனது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில், நான் நான்காவது படிக்கும் போது, எனது வகுப்புக்கு என் தாய் தான் ஆசிரியர். தேர்வுகளின் போது, நான் எடுக்கும் மதிப்பெண்ணை விடவும், என் தாய் எனக்கு குறைவான மதிப்பெண்களையே வழங்குவார். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்படும். அப்போது அவர் கூறுவார், "உனது தாய் ஆசிரியராக இருப்பதால்தான் நீ அதிக மதிப்பெண் வாங்குகிறாய் என்று யாரும் கூறிவிடக் கூடாது என்பதால்தான் குறைவான மதிப்பெண் வழங்குகிறேன்" என்று கூறினார்.

கற்பித்தல் என்பது வெறும் செயல்பாடு மட்டுமல்ல, அது வாழ்வியல் முறை என்று பிரகாஷ் ஜாவடேகர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரே கிருஷ்ணா கோயிலில் தாமோதர தீபத் திருவிழா நாளை தொடக்கம்

மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் பலத்த மழை

விவசாயிகள் தற்கொலைகளைத் தடுக்க தனிக்குழு அமைக்க வலியுறுத்தல்

கடல் சங்குகள் பறிமுதல்: இருவா் கைது

அஞ்சல் துறை சாா்பில் கடிதம் எழுதும் போட்டி

SCROLL FOR NEXT