கோப்புப்படம் 
இந்தியா

உ.பி.: கரோனா பாதித்த காவலர் மருத்துவமனையில் தற்கொலை

உத்தரப்புரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தலைமைக் காவலர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

DIN

உத்தரப்புரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தலைமைக் காவலர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

மொராதாபாத் தனியார் மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் தற்கொலை செய்துகொள்வது இது மூன்றாவது முறையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இப்பகுதியில் கடந்த மாதம் இரண்டு கரோனாவால் பாதிக்கப்பட்ட 28 வயது பெண் மற்றும் வங்கி மேலாளர் தற்கொலை செய்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து நேற்று (சனிக்கிழமை) கரோனாவால் பாதிக்கப்பட்ட தலைமைக் காவலர் மருத்துவமனையின் 5வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

தலைமைக்காவலர் மருத்துவமனையிலிருந்து தப்பிக்க முயன்றதாகவும், ஆனால் மருத்துவமனைப் பணியாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டதால், தலைமைக்காவலர் தமது குடும்ப உறுப்பினர்களாலும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனையில் கரோனா நோயாளிகளின் மனநிலையை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT