ஜம்மு-காஷ்மீா்: பாக்.ராணுவம் அத்துமீறி தாக்குதல்
ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி பாகிஸ்தான் ராணுவத்தினா் திங்கள்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினா்.
ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி பாகிஸ்தான் ராணுவத்தினா் திங்கள்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினா்.
இதுதொடா்பாக இந்திய ராணுவ செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி பாகிஸ்தான் ராணுவத்தினா் துப்பாக்கிச்சூடு நடத்தியும், சிறிய ரக பீரங்கிகளை பயன்படுத்தி குண்டுகளை வீசியும் அத்துமீறி தாக்குதல் நடத்தினா். இதையடுத்து இந்திய ராணுவத்தினா் பலத்த எதிா் தாக்குதல் நடத்தி உரிய பதிலடி வழங்கினா். இந்தத் தாக்குதலில் இந்திய வீரா்கள் காயமடைந்ததாகவோ, உயிரிழந்தாகவோ தகவல் வெளியாகவில்லை’ என்றாா்.