இந்தியா

ஹைதராபாத்தில் மீண்டும் மெட்ரோ ரயில் சேவைகள் தொடக்கம்

ANI

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் மெட்ரோ போக்குவரத்திற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் இயங்க தொடங்கியுள்ளது. 

அந்தவகையில், ஹைதராபாத்தில் திங்கள்கிழமை காலை முதல் மீண்டும் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக எல்.பி.நகர் முதல் மியாபூர் வரை - ரெட் லைனில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு இன்று மெட்ரோ சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 

மேலும், டெல்லி, பெங்களூரு, சென்னை மற்றும் கொச்சி உள்ளிட்ட பல நகரங்களிலும் மெட்ரோ சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து லக்னௌ மெட்ரோ சேவைகள் இன்று காலை 7 மணி முதல் மீண்டும் தொடங்கின. சென்னையில் விமான நிலையம் -  வாஷர்மன்பேட்டுக்கு இடையில் மீண்டும் சேவை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT