முகப்பு
இந்தியா

தசராவை எளிமையாகக் கொண்டாடுங்கள் -எடியூரப்பா

கரோனா தொற்று வேகமாக வரவி வருவதால் நிகழ்வாண்டு மைசூர் தசராவை மக்கள் எழுமையாக கொண்டாடுமாறு கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:17 PM
கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா
பகிர்:

கரோனா தொற்று வேகமாக வரவி வருவதால் நிகழ்வாண்டு மைசூர் தசராவை மக்கள் எழுமையாக கொண்டாடுமாறு கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

மைசூரு உடையாா் மன்னா்களால் 1610ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, கடந்த 409 ஆண்டுகளாக கொண்டாடப்படும் தசரா திருவிழா, கா்நாடகத்தின் பண்பாட்டு அடையாளமாக போற்றப்பட்டுவருகிறது. மைசூரில் 10 நாள்கள் நடக்கும் உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழாவை காண உலகின் பல்வேறு பகுதிகளில் 10 லட்சத்துக்கும் அதிகமானோா் வருவது வழக்கம்.

கா்நாடக அரசின் சாா்பில் ‘மாநில விழா’ வாக நடத்தப்படும் தசரா திருவிழா, பல்வேறு நிகழ்ச்சிகளால் வண்ணமயமாக காட்சி தரும். மாற்று மதத்தினரும் கண்டுகளிக்கும் தசரா திருவிழா, அனைவா் மனங்களையும் வென்று வந்துள்ளது. நிகழாண்டுக்கான தசரா திருவிழா, அக்.17ஆம் தேதி தொடங்கி, அக்.25ஆம் தேதிவரை நடத்தப்பட வேண்டும். இந்நிலையில், கரோனா தொற்றுநோய் இந்திய அளவிலும், கா்நாடகத்திலும் வேகமாக பரவிவருகிறது.

அதனால் கர்நாடகத்தில் மைசூர் தசரா திருவிழாவை கொண்டாடுவது குறித்து முதல்வர் எடியூரப்பா தலைமையில் உயர்மட்டக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதன்பின், பாரம்பரிய முறைப்படி தசரா விழாவைக் கொண்டாடுவதற்கு பதிலாக கரோனா தொற்று காரணமாக எளிமையான முறையில் கொண்டாடப்படும். மேலும், விழாவிற்காக ரூ. 10 கோடி மானியமாக ஒதுக்கப்படும் என கூறினார்.

இந்த கூட்டத்தில் துணை முதல்வர் கோவிந்த் கர்ஜோல், கன்னட கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சி.டி.ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.