பாகிஸ்தான் சுரங்க விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 18-ஆக உயர்வு
வடமேற்கு பாகிஸ்தானில் திங்கள்கிழமை நிலச்சரிவு காரணமாக பளிங்கு சுரங்கம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
வடமேற்கு பாகிஸ்தானில் திங்கள்கிழமை நிலச்சரிவு காரணமாக பளிங்கு சுரங்கம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் எல்லைக்கு அருகிலுள்ள கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள மொஹ்மண்ட் மாவட்டத்தில் பளிங்கு பாறைகள் இடிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது.
இதுகுறித்து மாகாண அமைச்சர் முஹம்மது ஆரிஃப் கூறுகையில்,
சுரங்கம் இடிந்து விழுந்ததில் 18 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது, மேலும் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுரங்கத்தின் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றது.
பாகிஸ்தானில் உள்ள சுரங்கங்களில் பாதுகாப்பு குறைபாடுகளால் பலர் பலியாகி வருகின்றனர். கடந்த 2011-ம் ஆண்டு சுரங்கத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 43 தொழிலாளர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.