ஒடிசாவில் மேலும் ஒரு அமைச்சருக்கு கரோனா பாதிப்பு
ஒடிசா மாநிலத்தின் உணவு விநியோகம் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் ரானேந்திர பிரதாப் ஸ்வைனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் உணவு விநியோகம் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் ரானேந்திர பிரதாப் ஸ்வைனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரானேந்திர பிரதாப் சுட்டுரையில் , கரோனா பரிசோதனை செய்ததில் எனக்கு தொற்று இருப்பது இன்று உறுதியாகியுள்ளது. கடந்த சில நாள்களாக என்னுடம் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
அம்மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்படும் 6ஆவது அமைச்சர் ரானேந்திர பிரதாப் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சுசாந்த் சிங், உயர்கல்வித்துறை அமைச்சர் அருண்குமார் சாஹூ, ஜவுளித்துறை அமைச்சர் பத்மினி தியான் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜே.பி.பனிகிராஹி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் துகுனி சாஹு ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர, ஒடிசா மாநிலத்தில் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 17 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.