முகப்பு
இந்தியா

நீட் தேர்வு: மாணவர்களுக்காக ஒடிசாவில் இலவச போக்குவரத்து சேவை

ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவர்களுக்காக இலவச போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகளை ஒடிசா மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.

Updated On : 12 செப்டம்பர், 2020 at 4:59 PM
ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக்
பகிர்:

ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவர்களுக்காக இலவச போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகளை ஒடிசா மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.

மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. 

ஒடிசா மாநிலத்தைப் பொருத்த வரை மொத்தம் 37 ஆயிரத்து 459 பேர் நீட் தேர்வு எழுத உள்ளனர். கரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுப்பதற்காக சுகாதார பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வுகள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மாநிலத்தில் உள்ள 83 நீட் தேர்வு மையங்களுக்கு இலவசப் போக்குவரத்து மற்றும் மாணவர்கள் தங்குவதற்கான இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புவனேஸ்வர், கட்டாக்,சாம்பல்பூர் உள்ளிட்ட 7 தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு உடல்வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு கடற்கரை ரயில்வே சார்பில் நீட் தேர்விற்காக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

"கரியார் சாலையில் இருந்து சாம்பல்பூர் வரையிலும், ராயகடா முதல் சம்பல்பூர் வரையிலும், பட்ராக் முதல் புவனேஸ்வர் வரையிலும், கியோஞ்சர் முதல் புவனேஸ்வர் வரையிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்" என்று ரயில்வே துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.