தாணேவில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ.500 அபராதம்
தாணே மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தாணே மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இல்லையெனில் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
தொற்றுப் பரவத் தொடங்கியதிலிருந்து முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு, அதைப் பொதுமக்கள் அனைவரும் கடைப்பிடிக்கவேண்டும் என்று மாவட்ட அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்டது.
ஆனால், பொதுமுடக்கம் தளர்த்தப்பட்ட பிறகு பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் சுதந்திரமாகச் சுற்றித் திரியத் தொடங்கிவிட்டனர். இதனால், நாளுக்கு நாள் கரோனா தொற்று மாவட்டத்தில் அதிகரித்து வருகின்றது.
Advertisement
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வெளியிடப்பட்ட உத்தரவில்,
மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கு, முகக்கவசம் அணியாதது ஒரு முக்கிய காரணமாகும். எனவே, அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியமாகும்.
பொதுவிடங்களில் முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என்று தாணே நகராட்சி ஆணையர் டாக்டர் விபின் சர்மா கூறியுள்ளார்.