முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் புதிதாக 2,278 பேருக்கு கரோனா: 10 பேர் பலி

தெலங்கானா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,534 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

Updated On : 12 செப்டம்பர், 2020 at 11:28 AM
Telangana records 2,278 new COVID-19 positive cases,10 deaths in last 24 hours
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:49 PM

தெலங்கானா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,534 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவில் தொற்று பாதிப்பு கடந்த சில நாள்களாக மேலும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisement

சனிக்கிழமை நிலவரப்படி தெலங்கானாவில் புதிதாக 2,278 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 1,54,880 ஆக அதிகரித்துள்ளது. 

ஒரே நாளில் 2,458 பேர் குணமடைந்த நிலையில், மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1,21,925-ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தெலங்கானாவில் 32,005 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நேற்று ஒருநாளில் மட்டும் 62,234 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 20,78,695 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. 

புதிதாக 10 பேர் உயிரிழந்ததால், இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 950 ஆக அதிகரித்துள்ளது இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.