முகப்பு
இந்தியா

கேரளத்தில் இன்று மேலும் 3,139 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று மேலும் 3,139 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
கோப்புப்படம்
பகிர்:

கேரளத்தில் இன்று மேலும் 3,139 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கேரளத்தில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனினும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் இன்று 3,139 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,08,278ஆக உயர்ந்துள்ளது. இன்றைக்கு தொற்று கண்டறியப்பட்டவர்களில் 36 பேர் வெளிநாடுகள் மற்றும் 126 பேர் மற்ற மாநிலங்களில் இருந்து கேரளத்துக்கு வந்தவர்கள். 2,921 பேருக்கு தொடர்பிலிருந்ததன் மூலம் தொற்று பரவியுள்ளது. 251 பேருக்கு எப்படி ஏற்பட்டது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.  

மேலும் இன்று 14 பேர் பலியானார்கள். இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 439 ஆக உயர்ந்துள்ளது. இன்று 1,855 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 77,703ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 30,072 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →