முகப்பு
இந்தியா

லடாக் எம்பிக்கு கரோனா பாதிப்பு

லடாக்கைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜம்யாங் செரிங் நம்கியாலுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 15 செப்டம்பர், 2020 at 12:11 PM
லடாக் நாடாளுமன்ற உறுப்பினர் ஜம்யாங் செரிங் நம்கியால்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:50 PM

லடாக்கைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜம்யாங் செரிங் நம்கியாலுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் லடாக் தொகுதியைச் சேர்ந்த பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜம்யாங் செரிங் நம்கியாலுக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து  நம்கியால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் தன்னுடன் சமீபகாலமாக தொடர்பில் இருந்த அனைவரையும் கரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.