இந்தியா

எம்.பி.க்கள் ஊதிய குறைப்பு மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்

DIN


கரோனா தொற்று காரணமாக அதிகரித்த செலவினங்களை ஈடுகட்ட, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை ஓராண்டுக்கு 30 சதவிகிதம் குறைப்பது தொடர்பான சட்ட மசோதா மக்களவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா திங்கள்கிழமை காலை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷியால் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

இதுதொடர்பாக, கடந்த ஏப்ரல் 6-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊதியம், படி மற்றும் ஓய்வூதிய திருத்த அவசரச் சட்டம்- 2020-க்கு மாற்றாக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக, கரோனா செலவினங்களைக் கருத்தில் கொண்டு இந்த அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ஒப்புதல் அளித்து, ஏப்ரல் 7-ம் தேதி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT