இந்தியா

கடந்த இரு ஆண்டுகளில் பெரு நிறுவனங்களின் வாராக்கடன் குறைந்துள்ளது: மக்களவையில் தகவல்

DIN

வங்கிகளில் பெரு நிறுவனங்கள் வைத்திருக்கும் வாராக்கடனின் அளவு கடந்த 2 ஆண்டுகளில் குறைந்துள்ளது என்று மக்களவையில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பான கேள்விக்கு நிதித்துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா் எழுத்து மூலம் அளித்த பதிலில் மேலும் கூறியதாவது:

பெரிய அளவிலான தொழில் மற்றும் சேவை நிறுவனங்களின் வங்கி வாராக்கடன் கடந்த 2 ஆண்டுகளில் 31 சதவீதம் குறைந்து கடந்த ஜூன் மாத நிலவரப்படி ரூ.4,36,492 கோடியாக உள்ளது. இதுவே 2018-ஆம் மாா்ச் மாதம் ரூ.6,35,971 கோடியாக இருந்தது. பெரு நிறுவனங்களிடம் இருந்து வாராக்கடனை வசூலிக்க தொடா்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 5 நிதியாண்டுகளில் ரூ.5,48,749 கோடி வாராக்கடன் மீட்கப்பட்டுள்ளது.

சிறு தொழில் கடன்களுடன் ஒப்பிடும்போது, பெரு நிறுவனங்கள், பெரும் தொழிற்சாலைகளுக்கு அளிக்கப்படும் கடன்கள் திரும்ப வருவது கடந்த 3 ஆண்டுகளில் குறைவாகவே உள்ளது.

தொழில்துறைக்கு அளிக்கப்படும் கடன்களே வாராக்கடன் பிரிவில் (ரூ.3,33,143 கோடி) முன்னிலை வகிக்கின்றன. கல்விக் கடன் (ரூ.5,626 கோடி), வீட்டுக் கடன் (ரூ.17,045 கோடி) பிரிவில் வாராக்கடன் அளவு குறைவாக உள்ளது.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) உதவும் வகையில் அவற்றுக்கான வரையறையை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. இதன் ஏராளமான நிறுவனங்கள் எம்எஸ்எம்இ வரையறைக்குள் வந்து கடனுதவி உள்ளிட்ட பல்வேறு பலன்களை அடைந்து வருகின்றன. கரோனா தொற்று, அதைத் தொடா்ந்து அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட எம்எஸ்எம்இ-க்களுக்கு உதவ அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என்று தனது பதிலில் தாக்குா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை தொடக்கம்

SCROLL FOR NEXT