இந்தியா

நாட்டில் புதிதாக 97,894 பேருக்கு கரோனா: மொத்த பாதிப்பு 51 லட்சத்தை கடந்தது

DIN

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 97,894 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51 லட்சத்தை கடந்துள்ளது.

பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் இந்தியாவிலும்  தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 97,894 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51,18,253-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,132 பேர் உயிரிழந்ததால், கரோனா தொற்றுக்கு மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 83,198-ஆக அதிகரித்துள்ளது. 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை முதன்முறையாக 10 லட்சமாக உள்ளது. மொத்தமாக 10,09,976 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 40,25,079-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றுக்கு உயிரிழப்போரின் விகிதம் 1.63 சதவிகிதமாக உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் விகிதம் 19.73 சதவிகிதமாக உள்ளது.

இந்தியாவில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தை கடந்தது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி 30 லட்சத்தை கடந்தது. செப்டம்பர் 5-ஆம் தேதி 40 லட்சமாகவும், செப்டம்பர் 16-ஆம் தேதி 50 லட்சமாகவும் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வால் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

SCROLL FOR NEXT