முகப்பு
இந்தியா

சூதாட்ட விளையாட்டு செயலிகளுக்குத் தடை: கூகுள்

விளையாட்டுகளின் மீது பந்தயம் வைக்கும் சூதாட்ட செயலிகளுக்குத் தடை விதிக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:22 PM
கோப்புப்படம்
பகிர்:

விளையாட்டுகளின் மீது பந்தயம் வைக்கும் சூதாட்ட செயலிகளுக்குத் தடை விதிக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விளையாட்டு போட்டிகளின் மீது இணையம் மூலம் பந்தயம் வைத்து விளையாடும் செயலிகள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் வகையில் கூகுள் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் வரும் 19-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதனிடையே ஐ.பி.எல்.போட்டிகளை மையமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் செயலிகளுக்குத் தடை விதிக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கூகுள் தெரிவித்துள்ளதாவது, ஆன்லைன் சூதாட்ட விடுதிகளை அனுமதிக்க மாட்டோம். விளையாட்டு பந்தயத்தை எளிதாக்கும் எந்தவொரு கட்டுப்பாடற்ற சூதாட்ட பயன்பாடுகளையும் ஆதரிக்க மாட்டோம்.

வெளிப்புற வளைதளம் மூலம் இணைய சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டு பணம் ஈட்டும் முறையும் எங்கள் விதிகளுக்கு புறம்பானது. பயனாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவே இத்தகைய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு விதிமுறைகளை மீறும் வகையிலான செயலிகளை கண்டறிந்து அதன் டெவலப்பருக்கு எச்சரிக்கை விடுக்கப்படும். பின்னர் பிளேஸ்டோரில் இருந்து அத்தகைய செயலி நீக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →