ராஜஸ்தானில் புதிதாக 810 பேருக்கு கரோனா: மேலும் 8 பேர் பலி
ராஜஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 814 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 8 பேர் உயிரிழந்தனர்.
ராஜஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 814 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 8 பேர் உயிரிழந்தனர்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ராஜஸ்தானில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக ராஜஸ்தான் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''புதிதாக 814 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,10,283-ஆக அதிகரித்துள்ளது.
Advertisement
கரோனா தொற்றுக்கு 18,282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக 15 பேர் குணமடைந்து வீடுதிரும்பியதால், மொத்தமாக தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 89,063-ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 8 பேர் உயிரிழந்ததால், கரோனாவால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,301-ஆக அதிகரித்துள்ளது'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.