முகப்பு
இந்தியா

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்

ஜம்மு- காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:22 PM
கோப்புப் படம்.
பகிர்:

ஜம்மு- காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. 

போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய ராணுவமும் திருப்பி தாக்குதல் நடத்தி தகுந்த பதிலடி கொடுக்கிறது.

இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர், பந்திப்போரா மாவட்டத்தின் குரேஷில் உள்ள கன்சல்வான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் சிறிய ரக குண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை தாக்குதல் நடத்தியது. 

இதற்கு இந்திய ராணுவமும் உரிய பதிலடி அளித்து வருகிறது. எனினும், அப்பகுதியில் இருந்து சேதம் ஏற்பட்டதாகவோ, உயிரிழப்பு குறித்தோ எந்த தகவலும் இல்லை என்று அவா் தெரிவித்தாா்.
 

முழு கட்டுரையைப் படிக்க →