இந்தியா

பாஜகவுடன் கூட்டணி தொடருமா? : ஆலோசனையில் சிரோமணி அகாலிதளம்

DIN

விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் பாஜகவுடனான கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படும் என சிரோமணி அகாலி தளம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியில் உள்ள சிரோமணி அகாலிதளம் கட்சியும் இந்த மசோதாக்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இதனைத் தொடர்ந்து மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சராக இருந்த சிரோமணி அகாலிதளத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் சிரோமணி அகாலிதளம் (எஸ்ஏடி) தலைவர் சுக்பீர் சிங் பாதல், தற்போதைய நிலையில் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் அங்கம் வகிப்பது குறித்து விவாதிக்க கட்சியின் முக்கிய குழு விரைவில் கூடும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நயன்தாராவின் ‘மண்ணாங்கட்டி’ படப்பிடிப்பு நிறைவு!

6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்!

ஹிந்துக்களின் மக்கள்தொகை சரிவுக்கு காங்கிரஸ் தான் காரணம்: பாஜக குற்றச்சாட்டு

பாகிஸ்தான் துறைமுகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 7 பேர் பலி!

கொளுத்தும் வெயிலா? பொழியும் மழையா? தமிழகத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT