முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 253 காவலர்களுக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 253 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 5 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 23 செப்டம்பர், 2020 at 3:42 PM
மகாராஷ்டிரத்தில் புதிதாக 253 காவலர்களுக்கு கரோனா
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:54 PM

மகாராஷ்டிரத்தில் புதிதாக 253 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 5 பேர் உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நாட்டில் அதிக அளவாக மகாராஷ்டிரத்தில் ஏராளமானோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கரோனா வைரஸ் தொற்றுக்கு முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் என ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Advertisement

அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் கரோனாவால் பாதிக்கப்படும் காவலர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 253 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 21,827-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 3,435 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றிலிருந்து  18,158 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

புதிதாக 5 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக இதுவரை கரோனாவால் உயிரிழந்த காவலர்களின் எண்ணிக்கை 234-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.