முகப்பு
இந்தியா

மொஹாலியில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து: 3 பேர் பலி 

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் 2 மாடி வணிகக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:25 PM
3 killed after two-storey building collapses in Punjab's Mohali
பகிர்:

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் 2 மாடி வணிகக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார். 

மீரா மல்லி மொஹல்லாவில் உள்ள இரண்டாவது தளத்தின், கட்டுமானத்தில் உள்ள ஒரு கடையின் மேல் கூறை இன்று காலை இடிந்து விழுந்தது. 

இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். பலியானோரின் சடலங்களை கைப்பற்றப்பட்டன என்று மொஹாலி துணை ஆணையர் கிரிஷ் தயாளன் கூறினார்.

மேலும், கட்டட உரிமையாளர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். கட்டடத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் கோபி, ராஜு மற்றும் ரமேஷ் என்று அடையாளம் காணப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார். 

சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதோடு, தேசிய பேரிடர் குழுவினர், கட்டடத்தில் யாரேனும் சிக்கியுள்ளனரா என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.