முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: சிஆர்பிஎஃப் வீரர் பலி

ஜம்மு-காஷ்மீரின் புட்கம் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:25 PM
CRPF officer killed in militant attack in J-K .
பகிர்:

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் புட்கம் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

புட்கம் மாவட்டத்தில் கைசர்முல்லாவில் 117 பட்டாலியனின் சிஆர்பிஎப்.யின் உதவி துணை ஆய்வாளரைத் தீவிரவாதிகள் சுட்டுக் காயப்படுத்தினர் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

இதையடுத்து, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்களில் ஒருவர் பலியாகியுள்ளதாகத் தெரிவித்தனர். மேலும், அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.