முகப்பு
இந்தியா

குப்வாரா மாவட்டத்தில் சாலை விபத்து: ஒருவர் பலி, 2 பேர் காயம்

வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவர் பலியாகினார், இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:25 PM
One killed, two injured in Kupwara road accident
பகிர்:

ஸ்ரீநகர்: வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவர் பலியாகினார், இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

குப்வாராவில் உள்ள கலரூஸில் இன்று காலை ஒரு டிராக்டர் திரும்பும் போது கவிழ்ந்ததில், டிராக்டரில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இரண்டு பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. காயமடைந்த இருவர் மன்சூர் அகமது மற்றும் பஷீர் அகமது என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.