முகப்பு
இந்தியா

மேற்குவங்கத்தில் மேலும் ஒரு அமைச்சருக்கு கரோனா

மேற்குவங்கத்தில் மேலும் ஒரு அமைச்சருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்குவங்க போக்குவரத்துத்துறை அமைச்சர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:25 PM
மேற்குவங்கத்தில் மேலும் ஒரு அமைச்சருக்கு கரோனா
பகிர்:

மேற்குவங்கத்தில் மேலும் ஒரு அமைச்சருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்குவங்க போக்குவரத்துத்துறை அமைச்சர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மேற்குவங்கத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர்களின் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது.

மேற்குவங்கத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சரான சுபேந்து ஆதிகாரிக்கு காயச்சல் மற்றும் கரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. மேற்குவங்க போக்குவரத்துத்துறை அமைச்சர் ஏற்கனவே தனிமைப்படுத்திக்கொண்டிருந்த நிலையில், தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

தன்னுடன் இருந்தவர்களும் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மேற்குவங்கத்தில் ஏற்கனவே உணவுத்துறை அமைச்சர், தீயணைப்புப்படை அமைச்சர், கால்நடை வளர்ப்பு அமைச்சர் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.