முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் லஷ்கர் இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:25 PM
ஜம்மு-காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
பகிர்:

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் லஷ்கர் இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் சிர்ஹாமா பகுதியில் தீவிரவாதிகள் இருப்பது குறித்து தகவல் கிடைத்ததன்படி, பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை மாலை சுற்றி வளைத்துத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

தீவிரவாதிகள் தொடர்ந்த தாக்குதலில், பயங்கரவாதிகள் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த மோதலில், இரண்டு தீவிரவாதிகள் உயிரிழந்தனர். 

லஷ்கர் இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை நடந்து வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.