ஜார்கண்டில் புதிதாக 1, 261 பேருக்கு கரோனா
ஜார்கண்டில் புதிதாக 1,261 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்படடுள்ளது. மேலும் 6 பேர் உயிரிழந்தனர்.
ஜார்கண்டில் புதிதாக 1,261 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்படடுள்ளது. மேலும் 6 பேர் உயிரிழந்தனர்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜார்கண்டில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக ஜார்கண்ட் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''நேற்றைய (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி புதிதாக 1,261 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 77,709-ஆக அதிகரித்துள்ளது. இதில் 12,533 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement
கரோனாவால் பாதிக்கப்பட்டு புதிதாக 1,270 பேர் குணமடைந்தனர். இதனால் மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 64,515-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 661-ஆக அதிகரித்துள்ளது'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.