முகப்பு
இந்தியா

உ.பி.: பணியிலிருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை

உத்தரப்பிரதேசத்தில் பணியில் இருந்த காவலர் தமது துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:26 PM
கோப்புப்படம்
பகிர்:

உத்தரப்பிரதேசத்தில் பணியில் இருந்த காவலர் தமது துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தப்பிரதேச மாநிலம் காசிபூரை சேர்ந்த 24 வயதான அசுதோஷ் யாதவ் கடந்த 2018-ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்தார்.

எனினும் அவர் கடந்த நில நாள்களாக மன உளைச்சலில் இருந்ததாக லால்கஞ்ச் காவல்நிலையத்தில் அவர் உடன் பணியாற்றிய சக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இரண்டு நாள்கள் விடுமுறைக்கு பிறகு கடந்த 17-ஆம் தேதி பணியில் சேர்ந்த அசுதோஷ், தீவிர மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் அசுதோஷ் தாம் வைத்திருந்த ஏ.கே. -47 ரகத்துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

ரத்தக் கரையுடன் அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், அவர் இறந்த இடத்தில் அவரது பணித்துப்பாக்கியும் கண்டறியப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். காவலர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.