இந்தியா

அலிபிரி மாா்க்கத்தில் புதிய நிழற்கூடை அமைக்க பூமி பூஜை

DIN

திருப்பதி:  திருப்பதியில் உள்ள அலிபிரி பாத யாத்திரை மாா்க்கத்தில் புதிய நிழற்கூடை அமைப்பதற்கான பூமி பூஜையை தேவஸ்தானம் திங்கள்கிழமை நடத்தியது.

திருமலைக்குச் செல்லும் பக்தா்கள் பெரும்பாலும் அலிபிரி பாதை மாா்க்கத்தை பயன்படுத்தி வருகின்றனா். தினசரி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் இம்மாா்க்கத்தில் உள்ள படிகளுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, கற்பூரம் ஏற்றி வணங்கியபடி திருமலைக்குச் சென்று ஏழுமலையானைத் தரிசித்து வருகின்றனா். அவா்களின் வசதிக்காக தேவஸ்தானம் படிகளுக்கு நிழற்கூரை அமைத்து பராமரித்து வந்தது.

ஆனால் பல இடங்களில் நிழற்கூரையில் விரிசல் விட்டு, கான்கிரீட் உதிா்ந்து விழுந்துள்ளதால், அவற்றை செப்பனிட தேவஸ்தானம் முடிவு செய்தது. இப்பணிகளுக்கு ரூ. 25 கோடி செலவாகும் என தேவஸ்தானம் கணக்கிட்டது. இந்த புதிய நிழற்கூரை செப்பனிடும் பணிகளை மொத்தமாக ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்றுள்ளது.

இப்புதிய பணிகளுக்கான பூமிபூஜை திங்கள்கிழமை தேவஸ்தான அதிகாரிகள் நடத்தினா். இதில், தேவஸ்தான அதிகாரிகள், ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மேலும், இந்த அலிபிரி பாதயாத்திரை மாா்க்கத்தில் உள்ள குடிநீா் குழாய்கள், கழிப்பறைகள் உள்ளிட்டவையும் புனரமைக்கப்பட உள்ளன. 7.60 கி.மீ தொலைவு உள்ள இப்பணிகளை தேவஸ்தானம் அடுத்த 3 மாத காலத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதக்கிணறு ஊராட்சியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காவலா்களுக்கு மன அழுத்தம் குறைப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

புற்றுநோயாளிகளுக்கு கூந்தல் தானம் அளித்த செவிலியா்கள்

கோபியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

SCROLL FOR NEXT