இந்தியாவில் கரோனா பாதிப்பு 12,759; பலி 420 ஆக உயர்வு: சுகாதாரத் துறை தகவல்
இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,759 ஆகவும் பலி எண்ணிக்கை 420 ஆகவும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,759 ஆகவும் பலி எண்ணிக்கை 420 ஆகவும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கை 1,515 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலங்களைப் பொருத்தவரையில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. இங்கு 2,919 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 187 ஆக அதிகரித்துள்ளது.
Advertisement
தொடர்ந்து தில்லியில் 1,578 பேரும், தமிழகத்தில் 1,267 பேரும், ராஜஸ்தானில் 1,023 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.