கரோனா பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்: ராகுல் காந்தி
கரோனா பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதன் மூலமாகவே கரோனா பரவலைத் தடுக்க முடியும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.
கரோனா பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதன் மூலமாகவே கரோனா பரவலைத் தடுக்க முடியும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று காணொளி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :
நாட்டில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. பிரதமர் மோடியுடன் பல விஷயங்களில் எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது, ஆனால், அவருடன் சண்டையிட இப்போது நேரம் இல்லை. கரோனா வைரஸை எதிர்த்துப் போராட இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கரோனா வைரஸ் நாட்டில் தீவிரமாகப் பரவுவதைத் தடுக்க முதல் ஆயுதமாக இருப்பது பரிசோதனை மட்டுமே.
Advertisement
அதாவது கடந்த 72 நாட்களில் ஒரு மாவட்டத்திற்கு 350 பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, கரோனா பரவலைத் தடுக்க பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். தற்போது இருக்கும் பரிசோதனை மையங்கள் மற்றும் உபகரணங்கள் போதுமானதாக இல்லை. கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு மட்டும் தீர்வல்ல. எனவே, பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில், பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கரோனா பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதன் மூலமாகவே இதனைத் தடுக்க முடியும். என்று தெரிவித்தார்.
மேலும், காணொளி வாயிலாக செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.