மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு 3,236 ஆக உயர்வு!
மகாராஷ்டிரத்தில் இன்று 34 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,236 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் இன்று 34 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,236 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், கரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு நாளுக்கு நாள் பாதித்தோரின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருக்கிறது.
இந்நிலையில், இன்று புதிதாக 34 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தகவல்தெரிவித்துள்ளது. இதில், புணேவில் 23 பேரும், மும்பையில் 6 பேரும், நாசிக் நகரில் 4 பேரும், தானே பகுதியில் இருந்தும் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
இதன்மூலம் மாநிலத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,236 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களில் இன்றைய தினமே மகாராஷ்டிரத்தில் பாதிப்பு குறைவு எனத் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று வரை மாநிலத்தில் 194 இறப்புகள் பதிவாகியுள்ளன
இந்தியாவில் கரோனா பாதிப்பு 13,387 ஆகவும் உயிரிழப்பு 437 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.