முகப்பு
இந்தியா

கடந்த 24 மணி நேரத்தில் 1,007 பேருக்கு கரோனா உறுதி; 23 பேர் பலி: மத்திய சுகாதாரத் துறை

கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,007 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Updated On : 17 ஏப்ரல், 2020 at 4:41 PM
பகிர்:

கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,007 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இன்று பிற்பகல் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,007 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 23 இறப்புகள் பதிவாகியுள்ளன.

Advertisement

கரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்தியும் சராசரி வளர்ச்சியில் 40% சரிவு காணப்படுகிறது. இந்தியாவில் கரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கும், இறப்புகளுக்கும் இடையிலான விகிதம் 80:20 ஆக உள்ளது. 

5 லட்சம் விரைவு பரிசோதனைக் கருவிகள் மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளன. கரோனா தடுப்பூசி வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் நாங்கள் கவனம்  செலுத்தி வருகிறோம். கரோனாவை எதிர்த்து போரிட பி.சி.ஜி, பிளாஸ்மா சிகிச்சை, மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் ஆகியவற்றில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்னர் 3 நாள்களில் கரோனா பாதிப்பு இரட்டிப்பான நிலையில், கடந்த 7 நாட்களின் தரவின் அடிப்படையில், தற்போது 6 நாட்களில் கரோனா பாதிப்பு விகிதம் இரட்டிப்பாகியுள்ளது. 19 மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. 

அதே நேரத்தில் கரோனாவைத் தடுப்பதில் கேரள மாநிலம் முன்னிலையில் உள்ளது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.