குஜராத்தில் மேலும் 108 பேருக்கு கரோனா; ஒரேநாளில் 4 பேர் பலி
குஜராத்தில் மேலும் 108 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,851 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்தில் மேலும் 108 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,851 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17,265 ஆகவும், உயிரிழந்தோா் எண்ணிக்கை 543 ஆகவும் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் ஒரேநாளில் மேலும் 108 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் மாநில சுகாதாரத்துறை அதிகாரி தகவல் தெரிவித்தார்.
Advertisement
தற்போது அம்மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,851 ஆக உள்ளது. பலி எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது. 106 பேர் குணமடைந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளனர்.