தெலங்கானாவில் புதிதாக 56 பேருக்கு கரோனா தொற்று உறுதி
தெலங்கானாவில் புதிதாக 56 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் புதிதாக 56 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றிய செவ்வாய்கிழமை இரவு 8 மணி நிலவர அறிவிப்பை அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, செவ்வாய்கிழமை புதிதாக 56 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 928 ஆக உயர்ந்துள்ளது. இதில் 711 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 194 பேர் குணமடைந்துள்ளனர். 23 பேர் பலியாகியுள்ளனர்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தெலங்கானா மாநிலத்தில் மட்டும் மே 7-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், முன்னதாக நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கு முன்பே தெலங்கானாவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
Advertisement