முகப்பு
இந்தியா

கரோனா தொற்று இல்லாத மாநிலமாக தொடர்ந்து நீடிக்கும் அருணாசலம்

நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்தியாவிலேயே ஒரே ஒரு மாநிலம் மட்டும் இதுவரை கரோனா தொற்று இல்லாத மாநிலமாகத் திகழ்கிறது.

Updated On : 21 ஏப்ரல், 2020 at 11:53 AM
பகிர்:

நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்தியாவிலேயே ஒரே ஒரு மாநிலம் மட்டும் இதுவரை கரோனா தொற்று இல்லாத மாநிலமாகத் திகழ்கிறது.

ஏப்ரல் 20-ம் தேதி நிலவரப்படி அருணாசலப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் 439 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 405 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்று தெரிய வந்துள்ளது. 34 பேரின் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரியவரவில்லை.

இதுவரை ஒருவருக்கும் கரோனா உறுதி செய்யப்படவில்லை என்று முதல்வர் பெமா காண்டு தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்தியாவில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்குகிறது. தமிழகத்தில் 1500ஐ தாண்டிவிட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.