முகப்பு
இந்தியா

மொபைல் ரீசார்ஜ், மின்விசிறி, புத்தகக் கடைகள் இயங்கலாம்: மத்திய உள்துறை அமைச்சகம்

மொபைல் ரீசார்ஜ் கடைகள், மின்விசிறி பழுதுபார்ப்பு கடைகள் இயங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

Updated On : 23 ஏப்ரல், 2020 at 5:01 PM
பகிர்:

மொபைல் ரீசார்ஜ் கடைகள், மின்விசிறி பழுதுபார்ப்பு கடைகள் இயங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்,  ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் சில கட்டுப்பாட்டு தளர்வுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்தது. 

இதைத்தொடர்ந்து மேலும் சில பணிகளுக்கு அனுமதி அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

அதன்படி, மொபைல் ரீசார்ஜ் கடைகள், மின்விசிறி பழுதுபார்ப்பு கடைகள் இயங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

நகர்ப்புறப் பகுதிகளில் மாணவர்களுக்கான புத்தகக் கடைகள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், வனத்துறை சார்ந்த பணிகள், விவசாயம், தோட்டக்கலை சார்ந்த பணிகளில் சேமிப்புக் கிடங்குகள், ஆய்வகங்கள் இயங்க அனுமதி. மாநிலங்களுக்கு இடையே விவசாயம் சார்ந்த பொருள்கள் கொண்டு செல்ல உள்ளிட்டவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.