முகப்பு
இந்தியா

ஒரே ஏடிஎம்-இல் பணம் எடுத்த ராணுவ வீரர்கள் மூவருக்கு கரோனா உறுதி

குஜராத்தின் பரோடாவில் ராணுவ வீரர்கள் மூவருக்கு கரோனா கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 24 ஏப்ரல், 2020 at 1:31 PM
பகிர்:

குஜராத்தின் பரோடாவில் ராணுவ வீரர்கள் மூவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ராணுவ வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது எவ்வாறு என்பது குறித்து விசாரிக்கையில், மூவரும் ஒரே நாளில் ஒரே ஏடிஎம்-இல் பணம் எடுத்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, மூவருக்கும் நெருங்கிய தொடர்பில் உள்ள 28 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

அதேபோன்று, குப்வாராவை தளமாகக் கொண்ட பேட்டாலியனில் செவிலியர்களுக்கு உதவியாளராக பணிபுரியும் மற்றொரு சி.ஆர்.பி.எஃப் வீரர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாக உள்ளது. அவர், தில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Advertisement

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 21,700 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 686 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,325  பேர் குணமடைந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.