மகாராஷ்டிரத்தில் பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்குகிறது; புணேவில் மேலும் 127 பேருக்கு தொற்று
மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி மகாராஷ்டிரத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,915 ஆக உள்ளது.
மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் இருந்து வருகிறது. பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், இன்று காலை நிலவரப்படி மகாராஷ்டிரத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,915 ஆக உள்ளது.
கடந்த 12 மணி நேரத்தில் அதிகபட்சமாக 597 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதில், புணேவில் மட்டும் கடந்த 12 மணி நேரத்தில் 127 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புணேவில் பாதிப்பு 1,722 ஆக அதிகரித்துள்ளது.
Advertisement
மாநிலத்தில் பலியானோரின் எண்ணிக்கை 432 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இதில் 1,593 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
இந்தியாவில் கரோனா பாதிப்பு 33,050 ஆகவும் உயிரிழப்பு 1,074 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.