இந்தியாவில் புதிதாக 78,761 பேருக்கு கரோனா; மேலும் 948 பேர் பலி
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 78,761 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 948 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 78,761 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 948 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இன்றைய கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 78,761 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கரோனா பாதிப்பு 35 லட்சத்தைக் கடந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 35 லட்சத்து 42 ஆயிரத்து 734 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 948 பேர் உள்பட கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 63,498 ஆக உயர்ந்துள்ளது.
அதேநேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 64,935 உள்பட நாடு முழுவதும் 27,13,934 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தற்போது 7,65,302 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கரோனா மீட்பு விகிதம் 76.61% ஆகவும், இறப்பு விகிதம் 1.79% ஆகவும் உள்ளது.
உலகளவில் கரோனா தொற்று அதிகமுள்ள நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாதிப்பு: 35,42,734
பலி: 63,498
குணமடைந்தோர்: 27,13,934
சிகிச்சை பெற்று வருவோா்: 7,65,302