பெங்களூருவில் உயரும் கரோனா பலி: இடுகாடுகளில் நீண்ட வரிசையில் நிற்கும் ஆம்புலன்ஸ்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மயானங்களில் உடல்களை எரிக்க வரும் ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் நிற்பதைக் காண முடிகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மயானங்களில் உடல்களை எரிக்க வரும் ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் நிற்பதைக் காண முடிகிறது.
கரோனா பாதித்து சிகிச்சை பலனின்றி மரணம் அடைவோரின் உடல்களையும், வேறு உடல்நலப் பிரச்னைகள் காரணமாக மரணமடைவோரின் உடல்களையும் எரிக்க மயானங்களுக்கு வரும் ஆம்புலன்ஸ்கள், தங்கள் முறை வருவதற்காக சாலையோரங்களில் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றன.
கரோனா நோயாளியின் உடலை மயானத்துக்குக் கொண்டு வந்து நல்லடக்கம் செய்யும் வரை, வேறு யாரும் உள்ளே அனுமதிக்கப்படாததால் உடல்களை தகனம் செய்ய அதிக நேரம் ஆவதாகவும் கூறப்படுகிறது.
Advertisement
இதையும் படிக்கலாம்.. தெலங்கானா: கரோனாவுக்கு கணவர், மாமனார், மாமியாரை இழந்த கர்ப்பிணி
அதே சமயம், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவ ஊழியர்கள் இன்றியும் தனியார் மருத்துவமனைகள் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
விரைவில் இந்த பிரச்னை தீர்க்கப்படாவிட்டால், பெங்களூருவில் கரோனா பாதிப்பு தீவிரமடையும் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.