கரோனா பாதிப்பு உயர்வு: பஞ்சாப் மாநில எல்லைகளை மூட உத்தரவு!
பஞ்சாப் மாநில எல்லைகளை மார்ச் 31ம் தேதி வரை மூட அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநில எல்லைகளை மார்ச் 31ம் தேதி வரை மூட அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு பின்பற்றப்படுகிறது. இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
தொடர்ந்து, கரோனா பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மார்ச் 31ம் தேதி வரை பஞ்சாப் மாநில எல்லைகளை மூட அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 14யை எட்டியுள்ள நிலையில், அரசு இந்த நடவடிக்கையும் எடுத்துள்ளது. ஜலந்தர், நவான்ஷஹர், கபுர்தலா மற்றும் ஹோஷியார்பூர் உள்ளிட்ட மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன.