முகப்பு
இந்தியா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 6 ஜனவரி 2021, 6:44 pm IST
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பகிர்:

புது தில்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14ஆம் தேதி சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் சென்னை வருவதாக இருந்தது. அத்துடன் சென்னை வருகையின்போது அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்தும் அவர் முக்கிய ஆலோசனை நடத்தலாம் எனக் கூறப்பட்டது.

Advertisement

அதேசமயம், நடிகர் ரஜினியையும் சந்தித்து அவரது உடல்நலம் பற்றி விசாரிக்கலாம் எனவும் தகவல் வெளியாகி இருந்தது.

முன்னதாக கடந்த நவம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்படுவதாக புதன் இரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.