அசாமில் கனமழை: வீடு இடிந்து விழுந்து மூவர் பலி  
இந்தியா

அசாமில் கனமழை: வீடு இடிந்து விழுந்து மூவர் பலி

அசாமில் கச்சர் மாவட்டத்தில் பெய்த கனமழையில் வீடு இடிந்து விழுந்து நொறுங்கியுள்ளது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்.

PTI

அசாமில் கச்சர் மாவட்டத்தில் பெய்த கனமழையில் வீடு இடிந்து விழுந்து நொறுங்கியுள்ளது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர். 

சோனாய் காவல் நிலையப் பகுதியில் உள்ள திலகிராமில் உள்ள ஒரு வீடு கனமழைக்கு இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் வீட்டிலிருந்து 35 வயது பெண், 2 மாத பெண் குழந்தை மற்றும் எட்டு வயது மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

மேலும், மூன்று குடும்ப உறுப்பினர்கள் காயமடைந்த நிலையில் சில்சார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். 

மாநில சட்டமன்ற துணை சபாநகாயர், எம்.எல்.ஏ அமினுல் ஹக் லஷ்கர் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சையாக்க அறிவுறுத்தினர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“VIJAY தேவையான விளக்கத்தை அளித்துள்ளார்! மீண்டும் ஆஜராவார்!” தவெக நிர்மல் குமார்

ராமராஜன் - கனகா சந்திப்பு!

அரிய வகை நட்சத்திர ஆமை மீட்பு!

தில்லியில் ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் சீனாவின் ஆளுங்கட்சியினர் சந்திப்பு!

ஊர்க்காவலர் பணியில் திருநங்கைகள்! பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வர்!

SCROLL FOR NEXT