piyush083853 
இந்தியா

தில்லி எய்ம்ஸில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் பியூஷ் கோயல் 

தில்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில்(எய்ம்ஸ்) தனது முதல் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல். 

ANI

தில்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில்(எய்ம்ஸ்) தனது முதல் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல். 

45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்டம் இன்று முதல் தொடங்குகிறது.

மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் செவ்வாய்க்கிழமை ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடத் தகுதியுடையவர்கள் என்று அறிவித்திருந்தார். அதன்படி, இன்று முதல் தடுப்பூசியை எடுத்துக்கொண்டேன். 

கரோனா தடுப்பூசி http://cowin.gov.in என்ற இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளலாம். மேலும், அருகிலுள்ள கரோனா தடுப்பூசி மையத்திற்குச் சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம். 

இதுவரை மொத்தம் 6,51,17,896 தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவண்ணாமலையில் ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை: காவலர்கள் பணிநீக்கம்

பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு! அண்ணாமலை குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் சுரங்கம் இடிந்து 4 தொழிலாளிகள் பலி!

தில்லி அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். குறித்து பாடம்! அமைச்சர்

பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT