முகப்பு
இந்தியா

கோவாவில் கரோனா நெறிமுறைகளுடன் புனித வெள்ளி கொண்டாட்டம்

கோவாவில், பனாஜியில் உள்ள இமாக்குலேட் கான்செப்சன் தேவாலயத்தில் புனித வெள்ளியான இன்று மக்கள் அனைவரும் கலந்துகொண்டனர். 

Updated On : 2 ஏப்ரல், 2021 at 12:03 PM
பகிர்:

கோவாவில், பனாஜியில் உள்ள இமாக்குலேட் கான்செப்சன் தேவாலயத்தில் புனித வெள்ளியான இன்று மக்கள் அனைவரும் கலந்துகொண்டனர். 

கரோனா தொற்று நோயையடுத்து, தேவாலயத்திற்குப் பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை சோதிக்கப்படுகிறது. மேலும் நுழைவாயிலில் கைப்படாத கைச்சுத்த திரவம் வைக்கப்பட்டுள்ளது. 

தேவாலயத்திற்கு வரும் மக்கள் முகக் கவசங்களை அணிந்தும், சமூக இடைவெளி விதிமுறைகளைக் கடைப்பிடித்தும் வருகின்றனர். 

Advertisement

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளி என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் ஏராளமான மக்கள் ஒன்றுகூடி ஆண்டவரைப் பிரார்த்தனை செய்கிறார்கள். 

இதற்கிடையில், கோவாவில் வியாழக்கிழமை நிலவரப்படி புதிதாக 265 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளன. இதுவரை மொத்த பாதிப்பு 58,304 ஆக அதிகரித்துள்ளது. 

மாநில சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி 1,716 பேர் தற்போது மருத்துவமனையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.